பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி அரைமணி நேரம் காக்க வைத்து விட்டதாக வெளியான தகவல் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மம்தா பானர்ஜியை கண்டித்துள்ளார்.

ஒடிசாவில் புயல்பாதிப்பு குறித்து ஆய்வு நடத்திய பிரதமர் மோடி முதல்வர் நவீன் பட்நாயக்குடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல் மேற்குவங்கத்திலும் மோடி-மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடையே ஆலோசனை நடைபெறவிருந்தது.

இதன்படி இந்தகூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டபடி வந்தபோது மம்தா பானர்ஜி அரை மணிநேரம் தாமதமாக வந்ததாக தெரிகிறது. மேலும் புயல்சேத விவரங்களை அறிக்கையாக பிரதமரிடம் ஒப்படைத்த மம்தா வேறு ஒருஇடத்தில் புயல் சேதநிலவரத்தை பார்வையிட வேண்டியதுள்ளது என்று கூறி உடனடியாக அங்கு இருந்து புறப்பட்டுசென்றார் என்று தகவல்கள் கூறுகின்றன.

மம்தா பிரதமரை அரை மணிநேரம் காக்க வைத்து விட்டதாகவும் அவர் திமிர்பிடித்தவர் என்றும் பாஜகவினர் குற்றம் சாட்டினார்கள். ஒரு முதல்வர் பிரதமருடனான சந்திப்பை தவிர்த்துவிட்டு வெளியேறுவது இதுவே முதல்முறை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மம்தா பானர்ஜியை கண்டித்துள்ளளார்.

இது தொடர்பாக அவர் டுட்டரில் கூறுகையில், ‘ மேற்கு வங்கத்தில் நடந்த இன்றைய நிகழ்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன. முதலமைச்சரும், பிரதமரும் நிறுவனங்கள் அல்ல, மக்களும் அல்ல. இவர்கள் இருவரும் பொதுசேவை மேற்கொள்வதற்காக அரசியலமைப்பு மீது சத்தியம் செய்துள்ளனர். பேரழிவுநேரத்தில் வங்காள மக்களுக்கு உதவிவழங்க வந்த பிரதமரை தவிர்க்கும் வகையிலான மம்தாவின் நடத்தை வேதனையானது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

Comments are closed.