உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட, ஐந்துமாநில தேர்தலில் பெற்றவெற்றியை தொடர்ந்து, மேற்கு வங்கத்தை குறிவைத்து, பா.ஜ., களமிறங்கியுள்ளது. அங்கு, 2021ல் ஆட்சியமைக்கும் இலக்குடன், 'மிஷன்பெங்கால்' திட்டத்தை, பா.ஜ., தலைவர் அமித் ஷா, நேற்று துவக்கி உள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின், அடுத்தடுத்து நடந்துவரும் சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., அசத்தல் வெற்றியை பெற்றுவருகிறது; டில்லி, பீஹார் உள்ளிட்ட, ஒருசில மாநிலங்கள் மட்டுமே கை நழுவியது.
 

சமீபத்தில், உ.பி., உத்தரகண்ட் உள்ளிட்ட ஐந்துமாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., நான்கை கைப் பற்றியது. உ.பி.,யில் உள்ள, 403 தொகுதிகளில், 325ல் வெற்றிபெற்று, அசுரபலத்துடன் ஆட்சியமைத்தது.இந்த உற்சாகத்துடன்,  தற்போது, மேற்குவங்க மாநிலத்திற்கு குறிவைத்துள்ளது.

திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த, மம்தாபானர்ஜி முதல்வராக உள்ள அம்மாநிலத்தில், 2021ல் சட்ட சபை தேர்தல் நடக்கவுள்ளது. அத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் இலக்குடன், 'மிஷன்பெங்கால்' என்ற பெயரில், கீழ் மட்டத்தில் இருந்து கட்சியைபலப்படுத்த,பா.ஜ., விரிவாக திட்டமிட்டுள்ளது.

 

இந்த பிரசார இயக்கத்தை, பா.ஜ., தலைவர் அமித்ஷா,  மேற்கு வங்கத்தில், நக்சலைட் அமைப்பு, 1960ல் துவங்கியஇட மான, நக்சல்பாரி கிராமத்தில் துவக்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: நக்சல்பாரி கிராமத்தில் குவிந்துள்ள, பா.ஜ., தொண்டர்கள் மிகச்சத்தத் து டன், கோஷமிட வேண்டும். இது, தலைநகர் கோல்கட்டாவில் எதிரொலிக்க வேண்டும்.வளர்ச்சி என்ற நம்இலக்கு, இங்கு தோன்றி, வன்முறையை வீழ்த்த வேண்டும்.

 


எங்கு வன்முறை துவங்கியதோ, அங்கு வன்முறைஅழிந்து, பா.ஜ.,வின் சின்னமான தாமரை மலர்வதை காணப்போகிறோம்; இம்மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி அமையும் நாள், வெகுதுாரத்தில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து, மேலும் சிலநாட்கள் அம்மாநிலத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேற்கு வங்கத்தில், அடுத்தாண்டு நடக்க உள்ள உள்ளாட்சிதேர்தலிலும், பின், 2019ல் நடக்கவிருக்கும் பார்லிமென்ட் தேர்தலிலும், கணிசமான வெற்றியை பெற, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மேற்கு வங்கத்தில், சமீபத்தில் நடந்த, தெற்கு கந்தி சட்டசபை இடை தேர்தலில், அனைவரும் எதிர்பார்த்தது போலவே, ஆளும்கட்சியான திரிணமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதேசமயம், 31 சதவீத ஓட்டுக்களைபெற்று, பா.ஜ., இரண்டாம் இடம் பிடித்தது;

 


மாநிலத்தின் முக்கிய எதிர்க் கட்சியான மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது; 2016 சட்ட சபை தேர்தலில், இத்தொகுதியில், பா.ஜ., 9 சதவீத ஓட்டுகள்மட்டுமே பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply