மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சி இருண்டகாலம் என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் தற்போது சட்ட மன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. 6 கட்டமாக அறிவிக்கப்பட்ட தேர்தலில் 3 கட்டதேர்தல்கள் ஏற்கனவே முடிந்துவிட்டன. 4 வது கட்ட தேர்தல் வரும் 25ம் தேதி நடக்க இருக்கிறது. வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று பொதுகூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது மம்தா ஆட்சியை கடுமையாக விமா்சித்தார்.

மம்தாவின் ஆட்சி கடந்த இடது சாரிகள் ஆட்சியையை காட்டிலும் இருண்ட காலமாக இருக்கிறது என்றார். அவர் மேலும் கூறுகையில், கடந்த 2011ம் ஆண்டு மம்தா ஆட்சிக்கு வந்தபோது மேற்கு வங்கத்துக்கு விடிவுகாலம் ஏற்பட்டிருப்பதாக அனைவரும் எதிர்பார்த்தனர். 34 ஆண்டுகால இடதுசாரிகளின் இருண்ட ஆட்சி விரட்டி அடிக்கப் பட்டதாக நம்பினர். ஆனால் வெளிச்சம் வருவதற்கு பதிலாக கடுமையான இருள் மேற்குவங்கத்தை இப்போது சூழ்ந்துள்ளது. ஒரு காலத்தில் ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியவர் மம்தா. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் மாறிவிட்டார். விவேகானந்தா மேம்பாலம், சாரதா ஊழல், நாரதா டேப் என அவரது ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது என்றார்.

Leave a Reply