மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தவறான ஆட்சிக்கு எதிராகமாபெரும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.


இது தொடர்பாக கொல்கத்தாவில் 2 நாள்கள் நடைபெற்ற மாநில பாஜக செயற் குழுவில் முடிவுசெய்யப்பட்டது.
இதுகுறித்து கொல்கத்தாவில் பாஜக பொதுச்செயலாளரும், மாநில பாஜக ஒருங்கிணைப்பாளருமான கைலாஷ் விஜயவர்கீய தெரிவித்ததாவது: மேற்குவங்க மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது. இந்தநிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமராக வேண்டும் என்று கனவுகாண்கிறார்.


அவரது தவறான ஆட்சிக்கு எதிராக மாநிலமுழுவதும் மாபெரும் இயக்கத்தைத் தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது. மேற்குவங்கத்தில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையே மறை முகக் கூட்டணி உள்ளதாக கடந்த 2 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட், காங்கிரஸ் ஆகியகட்சிகள் மேற்கொண்ட தவறான பிரசாரத்தால் பாஜக பாதிக்கப்பட்டது.


ரோஸ்வேலி நிதிநிறுவன மோசடியில் ஈடுபட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இருவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் அதுபோன்ற அரசியல் பேச்சுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. அத்துடன் வங்கத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுத்தது என்றார் அவர்.

Leave a Reply