ஒரேநாளில் 2 கோடி மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத் துள்ள மராட்டிய அரசிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் 20 சதவீதம் வனப் பரப்பு உள்ளது. இதனை 33 சதவீதம் வரை உயர்த்த அம்மாநில அரசு முயற்சிசெய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் நேற்று 2 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில வனத் துறை மந்திரி சுதி முகந்திவார் கூறுகையில், மேலும் 50 கோடி மரக் கன்றுகள் அடுத்த 3 ஆண்டுகளில் நடப்படும். 33 சதவீதம் வனப் பரப்பை எட்டும் முயற்சியில் மொத்தம் 400 கோடி மரக் கன்றுகள் நடப்படப்படும் இவ்வாறு அவர் கூறினார் மகாராட்டிய அரசின் இந்த முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply