வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் நலனைகாக்க பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். அதேபோல் இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை வைத்து கொள்ளாவிட்டாலும், அந்நாட்டவருக்கு மருத்துவவிசா கிடைக்க மனிதாபிமான அடிப்படையில்   உதவிவருகிறார்.

இந்நிலையில், நசீம் அக்தர் என்ற பாகிஸ்தான் பெண்ணின் மகன், தனதுதாய் இந்தியாவில் சிகிச்சை பெற விசா வழங்க உதவிசெய்யும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதேபோல், ஷபீர் அகமதுஷா என்பவரின்மகன் அலி அசதுல்லாவும், தனதுதந்தைக்கு விசா கிடைக்க உதவும்படி கேட்டிருந்தார். இருவரும் இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்வதற்காக விசா கேட்டிருந்தனர்.

இதையடுத்து ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மா ஸ்வராஜ், ‘‘உங்கள்தாய்க்கு விசா வழங்க இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை அறிவுறுத்திஇருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும், “உங்கள் (அலி அசதுல்லா) தந்தையின் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு விசாவழங்க இந்திய தூதரகத்திடம் கூறியிருக்கிறோம். நீங்கள் அங்குஅணுகவும்” என்று பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் பைசலாபாத்தைசேர்ந்த எம்.மொசீன் என்பவர், தனதுஉறவினர் பர்சானா இஜாஸ் என்பவர் மிகவும் கவலைக் கிடமான நிலையில் இருக்கிறார். அவருக்கு இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்ய விசா வழங்க உதவவேண்டும் என்று சுஷ்மாவுக்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைபார்த்த சுஷ்மா ஸ்வராஜ், பர்சானாவுக்கு மருத்துவவிசா வழங்க அறிவுறுத்தி உள்ளார்.

Leave a Reply