தமிழக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மத்திய அரசிடம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மருத்துவ மேல்படிப்புக்கான தேர்வு, அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும் வரை தற்போதைய தேர்வுமுறை தொடர வேண்டும் எனவும், கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் படியாகத்தான் தேர்வு இருக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மரியாதைக்குரிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடமும் நேரிலேயே இது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அதற்கு பலன்கிடைத்திருப்பது ஆறுதல்.
அதன்படி இந்த ஆண்டு நுழைவு தேர்வு இல்லாமல், இந்த ஆண்டு +2 மார்க் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என மாநில அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் பலன் பெறும் வண்ணமும் பாரதிய ஜனதா கட்சி செயல்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசுக்கு தமிழக மருத்துவ மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற முடிவை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்
(டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்)