கலால்வரி, சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலமான வருவாய், கடந்தமாதம் மட்டும் (ஏப்ரல்) 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 இது தொடர்பாக மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடந்த நிதியாண்டில் (2015-16) ஏப்ரல் மாதம், ரூ.45,417 கோடியாக இருந்த மறைமுகவரிகள் மூலமான மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டில் ரூ.64,394 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்தமாதம் மட்டும் முறைமுக வரி வருவாய் 42 சதவீதம் அதிகரித்துள்ளது.

 இதில், ரூ.16,546 கோடியாக இருந்த பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி வருவாய், ரூ.28,252 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் ஏப்ரல்மாத வருவாயுடன் ஒப்பிடும்போது 71 சதவீதம் அதிகமாகும். இதே போன்று, ரூ.14,585 கோடியாக இருந்த சேவைவரி வருவாய், 28 சதவீதம் உயர்ந்து ரூ.18,647 கோடியாகவும், ரூ.14,286 கோடியாக இருந்க சுங்கவரி வசூல், 22.5 சதவீதம் அதிகரித்து ரூ.17,495 கோடியாகவும் உள்ளது. கலால்வரி வருவாய் குறிப்பிடத்தக்க

Leave a Reply