மத்திய அரசு மறைமுகவரியாக 7.04 லட்சம்கோடி திரட்ட கடந்த 2015-16-ம் நிதி ஆண்டுக்கு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. இப்போது நிர்ணயம் செய்ததைவிட கூடுதலாக மறைமுகவரி கிடைத்திருப்பதாக உற்பத்தி மற்றும் சுங்கவரி ஆணையத்தின் தலைவர் நஜிப் ஷா தெரிவித்தார்.

திருத்திய கணிப்பின்படி ரூ. 7.04 லட்சம் கோடி திரட்ட மத்தியஅரசு நிர்யணம் செய்தது. இப்போது ரூ. 7.09 லட்சம் கோடி திரட்டப்பட்டு விட்டது என்று அவர் கூறினார். சுங்கவரி, உற்பத்திவரி மற்றும் சேவை வரி ஆகியவை சேர்ந்தது மறைமுகவரி ஆகும்.

சர்வதேசளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்துவந்தது. இந்த சூழ்நிலையை பயன் படுத்தி மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்திவரியை உயர்த்தியது. மறைமுக வரி வசூல் உயரபெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரி மிகவும் உதவியதாக ஷா கூறினார்.

நடப்பு நிதி ஆண்டில் (2016-17) மறைமுகவரி வசூல் இலக்காக ரூ.7.80 லட்சம் கோடியை ரூபாயை மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கிறது.

2015-16 நிதி ஆண்டில் நடப்புகணக்கு பற்றாக் குறை ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்ட 3.9 சதவீதத்துக்குள் இருக்கும் என்று மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

எதிர் பார்த்த அளவுக்கு வரி வருமானம் இருக்கிறது. பங்கு விலக்கல் நிதியும் இருப்பதால் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கடந்த மார்ச் 31 வரை பங்குவிலக்கல் மூலம் ரூ.25,000 கோடி திரட்டப்பட்டிருக்கிறது.

நிதிப்பற்றாக் குறையில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. நடப்பு 2016-17ம் நிதி ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட நிதிப்பற்றாக் குறை அளவான 3.5 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply