பருவ மழைக்காலத்தில் மழை நீரின் ஒவ்வொரு துளியையும் சேமிக்க வேண்டும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும்  வெப்பம் நிலவுகிறது. இதனால், மனிதர்கள்மட்டுமன்றி, பறவைகள், விலங்கினங்களும் பிரச்னைக்கு ஆளாகியுள்ளன. இதற்கு சுற்றுச் சுழலே காரணமாகும். சுற்றுச் சுழல் பிரச்னைகள் அதிகரித்ததாலேயே, வெப்பம் அதிகரித்துள்ளது.

காடுகளை அழிக்கும்பணி தொடர்கிறது. மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகின்றன. இதுபோன்ற செயல்களால், சுற்றுச் சுழலை மனித இனம் அழித்து வருகிறது. இதன்மூலம், அழிவுப்பாதையில் தன்னைத்தானே மனித இனம் இட்டுச்சென்றுள்ளது.

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், ஜம்முகாஷ்மீர் மாநிலங்களில் அண்மையில் மிகப் பெரிய அளவில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதற்கு காய்ந்தசருகுகளும், கவனக்குறைவுமே காரணமாகும். இதனால் தான், காட்டைப் பாதுகாப்பதும், நீரைசேமிப்பதும் நாட்டு மக்களின் ஒவ்வொருவரின் பொறுப்பாகிறது.

மழைநீர் என்பது கடவுள் நமக்கு அளிக்கும் பரிசாகும். அந்த மழைநீரின் ஒருதுளி வீணானாலும், அது நமக்கு பாதிப்புதான். எனவே, மழைநீரை சேமிப்பதற்கு நாட்டுமக்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பருவ மழைக் காலத்தில் பெய்யும் மழைநீரின் ஒருதுளியையும் வீணாக்குவதில்லை என்று நாட்டு மக்கள் முடிவெடுக்க வேண்டும்.

தண்ணீர் பிரச்னை விவசாயிகள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இது அனைவ ரையும் பாதிக்கும் பிரச்னையாகும். மழைக்காலம் வரப்போகிறது. எனவே மழைநீரை சேமிப்பதற்கான ஏற்பாடுகளை அனைவரும் தற்போதே தொடங்கவேண்டும். இந்த பருவமழை காலத்தை நாட்டுமக்கள் வீணாக்கி விடக்கூடாது.

அடுத்த 4 மாதங்களில், மழைநீரின் ஒவ்வொரு துளியையும் சேமிக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, "சேவ் வாட்டர் அபியான்' எனும் மிகப் பெரிய இயக்கத்தை நடத்தவேண்டும். இந்தப் பணி, அரசு மற்றும் அரசியல் வாதிகளுக்கானது மட்டுமல்ல. பொது மக்களும் மிகப்பெரியளவில் பங்கெடுக்க வேண்டும். இதுகுறித்து ஊடகமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

வறட்சி நிலைகுறித்து பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது நீரைசேமிப்பதற்கு பல்வேறு நல்லதிட்டங்களை அந்த மாநிலங்கள் செயல்படுத்தியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, நாடுமுழுவதும் நீரை சேமிக்கும் முறையை ஏற்படுத்துவது குறித்து ஆய்வுசெய்யும்படி நிதி ஆயோக் அமைப்பை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

சர்வதேச யோகாதினம்: நாட்டுமக்கள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் வாழ்வதற்கு, யோகாவை கடைபிடிக்க வேண்டும். அடுத்தமாதம் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, சண்டீகரில் அன்றைய தினம் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் நானும் கலந்துகொள்ள இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலியில் மனதின் குரல் (மன் கீ பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரதமர்  ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரை :

 

தனது 30 நிமிட வானொலி உரையில், ஜன்தன் வங்கிக்கணக்கு, ஆதார் அட்டை, செல்லிடப்பேசி மூலம் வங்கிச் சேவை, ரூபே ஏடிஎம் அட்டை உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் பேசினார்.

சிபிஎஸ்இ தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்ததுடன், மாணவர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.

Leave a Reply