மழையால் பாதிக்கப் பட்டு நலிவடைந் தவர்கள் மீண்டும் தொழில்தொடங்க மத்திய அரசு கடனுதவி வழங்கும் என மத்திய இணை அமைச்சர் கிரிராஜ்சிங் கூறினார்.

மத்திய சிறு மற்றும் குறு தொழில்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங், நேற்று மதியம் 1 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைவந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி. சென்னையில் பெய்த பலத்தமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சிறு , குறு தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்தன. இவற்றை  அருண் ஜெட்லி, வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் நேரில் ஆய்வுசெய்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட தொழில்களை மீண்டும் புனரமைத்து தொடங்குவதற்கு, தேவையான கடனுத விகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் குறித்த பட்டியல் தயார் செய்யப் பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசுடன் கலந்துபேசி வருகிறோம். விரைவில், இதுதொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு, தேவையான கடனுதவிகள் வழங்கப்படும். அதன் மூலம் மழையால் பாதிக்கப்பட்டு, நலிவடைந்த தொழில்கள், மீண்டும் தொடங்கி நடத்த அனைத்து ஏற்பாடு களையும் மத்திய  அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply