மாட்டிறைச்சி உண்பது மனிதத் தன்மைக்கு எதிரானதாகும் என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்தார்.


ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வியாழக் கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் மத்திய அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்புதெரிவித்து சிலர் சாலைகளில் மாட்டிறைச்சி உண்கின்றனர்.


நாட்டில் மொத்தம் 121 கோடி மக்கள் உள்ளனர். அவர்களில் சிலர்மட்டுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன்மூலம் தேசத்தின் விருப்பத்தை அவர்கள் பிரதிபலிக்கவில்லை என்பது தெளிவாகிறது. மனிதத்தன்மைக்கு எதிரான இதுபோன்ற செயலை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.
மாட்டிறைச்சியை உண்பதற்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள். பசும்பால் உடல்நலத்துக்கு நன்மை தரும். மாட்டிறைச்சி உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும். இந்த உண்மையை மக்கள் புரிந்துகொண்டு மாட்டிறைச்சி உண்பதை மக்கள் தவிர்க்கவேண்டும் என்றார் இந்திரேஷ் குமார்.

Tags:

Leave a Reply