மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் எப்படி ஜல்லிக் கட்டு ஆதரவாளர்களாக முடியும் என்று பாஜக மாநிலச்செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசரச் சட்டத்தை இயற்றியுள்ளது . தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்து விட்ட நிலையில், அவசரச்சட்ட வரைவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் எப்படி ஜல்லிக் கட்டு ஆதரவாளர்களாக முடியும் என்று தனது ட்விட்டர் பதிவில் பாஜக மாநிலச்செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ள இளைஞர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்றுள்ள அவர் இனிமேல் மாட்டிறைச்சி சாப்பிடாமல் இருப்போம் என்று அவர்களால் உறுதியளிக்கமுடியுமா என்று கேட்டிருக்கிறார்.

Tags:

Leave a Reply