நடப்பு கல்வியாண்டுக்கான (2020-21) பாடத் திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப் படுவதாக சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அதன்படி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 190 பாடத்திட்டங்களில் அரசியல் அறிவியல்பிரிவில் ஜனநாயக உரிமைகள், இந்தியாவில் உணவுபாதுகாப்பு, கூட்டாட்சி, குடியுரிமை மற்றும் மதச் சார்பின்மை போன்ற முக்கிய அத்தியாயங்களை சிபிஎஸ்இ நீக்கியுள்ளதாக சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிபிஎஸ்இ பாடத் திட்டத்திலிருந்து சில பாடங்களை நீக்கியது தொடர்பாக பலவிமர்சனங்கள் வந்துள்ளன. தவறான கதைகளை சித்தரிக்க தலைப்புகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்கள் (அரசியல்வாதிகள்) பரபரப்பை நாடுகின்றனர். மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. நிபுணர்களின் ஆலோசனை, பரிந்துரைகளை பின்பற்றியே பாடத் திட்டங்கள் குறைக்கப்  பட்டன. கல்வியில் அரசியலை புகுத்துவதை விட்டுவிட்டு, நமது அரசியலில் அதிக கல்வியை புகுத்துவோம். குழந்தைகளுக்கு கல்விபுகட்டுவது புனிதமான பணியாகும். அதை அரசியல் ஆக்கவேண்டாம்” என்றார்.

Comments are closed.