மாநில அரசின் பரிந்துரை மற்றும் முறையான விசார ணைக்கு பின்பே, அண்டை நாடுகளில் இருந்து வந்தவர்களுககு இந்தியகுடியுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். 1955ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் சிலதிருந்தங்கள் கொண்டு வரப்பட்டு அந்தசட்டம் மக்களவையில் கடந்த ஜனவரி 8ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, புத்தம், ஜெயின், கிறிஸ்து, சீக்கியம் மற்றும் பார்சிஸ் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு இருந்து இந்தியாவில் வசித்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலம் சன்ங் சாரியில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “முறையான விசாரணை மற்றும் மாநில அரசின் பரிந்துரைக்கு பின்னரே இந்தியகுடியுரிமை வழங்கப்படும். அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவின் வளங்களை கைப்பற்றும் நோக்கில் இங்கு வந்தவர்களையும், அதே அண்டைநாட்டில் நிகழ்ந்த அட்டூழியங்கள் காரணமாக, வந்தவர்களையும் பிரித்து பார்க்க வேண்டும். மதத்தின் பேரில் துன்புறுத்தப்பட்டு அண்டை நாடுகளில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட அந்நாட்டின் சிறுபான்மையினரை காக்க வேண்டியது இந்தியாவின் கடமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *