பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக அறிவித்தார். கருப்புபணம் ஒழிப்பதற்கு, தீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தரப்பில் இந்தநடவடிக்கைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

கறுப்பு பண ஒழிப்பின் இந்த நடவடிக்கை காரணமாக நாடுமுழுவதும் பலரிடம் கோடிக் கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது. மேலும் அடுத்ததாக பினாமி சொத்துக்கள் குறித்து விசாரித்து கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

 


இந்நிலையில், ரூபாய் நோட்டு ரத்துநடவடிக்கைக்கு பிறகு மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி வங்கி கணக்கில் 104 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அமலாக்கத்துறை சார்பில் இந்ததகவல் வெளியிடப் பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், ரூ.1.43 கோடி மாயாவதியின் சகோதரர் ஆனந்த்குமார் வங்கிகணக்கில் டெபாசிட் செய்யப் பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கிக்கிளைகளின் விவரங்கள் இன்னும் வெளியிடப்பட வில்லை. தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்ட சபை தேர்தலில் மயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி முக்கியபங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply