பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, வருண் சிங் இருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி முதல் இந்திய பிரபலங்கள் பலர் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

பிரேசிலின் ரியோடிஜெனிரோவில் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச்சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
 

 மாரியப்பனுக்கு ரூ.75 லட்சமும், அதே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வருண் சிங்குக்கு ரூ.30 லட்சமும் இந்திய விளையாட்டுத்துறை சார்பாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது தமிழக அரசும் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ2 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்திய பிரதமர் மோடி முதல் இந்திய பிரபலங்கள் பலர் மாரியப்பன் தங்கவேலுக்கும், வருண் சிங்குக்கும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில…

நரேந்திர மோடி

இந்தியா பறப்பது போல் உள்ளது!… பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற வருண் சிங்குக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அபினவ் பிந்த்ரா

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் இணைந்த மாரியப்பனை வரவேற்கிறேன். மாரியப்பன், வருண்சிங் இருவருக்கும் வாழ்த்துகள்.

விஜய் கோயல்

பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.75 லட்சமும், வெண்கலப்பதக்கம் வென்ற வருண் சிங்கிற்கு ரூ.30 லட்சமும் இந்திய விளையாட்டுத் துறை சார்பாக அளிக்கப்படும். இருவருக்கும் வாழ்த்துகள்….

சாக்‌ஷி மாலிக்

இது மிகப் பெரிய சாதனையாகும். நமது தடகள வீரர்களை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. மாரியப்பன் மற்றும் வருண்சிங் இருவருக்கும் வாழ்த்துகள்…

விரைன் ரஸ்கினா

வாழ்த்துகள் மாரியப்பன். இதைவிட ஊக்கமளிக்கும் செய்தி வேறு ஏதும் இல்லை.

அமிதாப் பச்சன்

மகிழ்ச்சியில் இந்தியா….! மாரியப்பன், வருண்சிங் இருவரும் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளனர். கம் ஆன் இந்தியா….

சச்சின் டெண்டுல்கர்

பதக்கம்வென்ற மாரியப்பன், வருண்சிங் இருவருக்கும் வாழ்த்துகள்… உங்களது வலிமை , உத்வேகத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. தொடர்ந்து மிளிருங்கள்…..

அனுஷ்கா சர்மா

பாரா ஒலிம்பிக்கில் வரலாற்று சாதனை படைத்த மாரியப்பன், வருண்சிங் இருவருக்கும் வாழ்த்துகள்

அரவிந்த் கேஜ்ரிவால்

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன், வருண் சிங் இருவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உங்களால்தேசம் பெருமை அடைந்துள்ளது.

வீரேந்திர ஷேவாக்

பதக்கம் வென்ற மாரியப்பன், வருண் சிங் இருவருக்கும் வாழ்த்துகள்.. இந்த இரு ஹீரோக்களும் எல்லா பிரச்சனையும் மீறி இந்த சாதனையை புரிந்துள்ளனர்.

Leave a Reply