234 தொகுதிகளுக்கும் பாஜக சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாராக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
 
பாஜக தலைமை அலுவலகமான சென்னை தியாக ராயர் நகரில் உள்ள கமலாலயத்தில் அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 60 சதவீத மக்கள் நடுநிலை யாளர்களாக உள்ளனர். கடந்த சட்ட சபை தேர்தலை போன்று இந்த சட்ட சபை தேர்தல் முடிவு இருக்காது.
 
திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளின் மீதும் தமிழக மக்கள் மிகுந்த வெறுப்பில் உள்ளனர். விடிவுகாலம் எப்போது வரும் என்று காத்திருக்கின்றனர். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. விழித்துக் கொண்டார்கள்.  இனிமேல் பிழைத்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். தமிழக சட்ட மன்றத்திற்கு நடைபெற உள்ள தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
பாஜக தேர்தல்கமிட்டி அங்கீகரித்த பின்னர் கட்சியின் அகில இந்திய தலைமைதான் முடிவுகளை அறிவிக்க வேண்டும். அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப் பட்டதால் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அர்த்த மில்லை என்றார். செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் மார்ச் 21, 22ல் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply