அசாமில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான உதவி மையத்தை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை அமைச்சர் தவார்சந்த் கெலாட் காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கிவைத்தார். இதன் மூலம் 4,147 பயனாளிகளுக்கு, ரூ.261.15 லட்சம் மதிப்பிலான 7,585 உதவி பொருட்கள் வழங்கப்படுகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிபொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 3,551 மாற்றுத் திறனாளிகளுக்கும், ராஷ்ட்ரிய வயோஸ்ரீ திட்டத்தின்கீழ் மூத்த குடிமக்கள் 596 பேருக்கும் உதவிபொருட்கள் வழங்கும் முகாமை, அசாம் மாநிலத்தின் நகான் நகரில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார்சந்த் கெலாட் காணொலிகாட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இந்தமுகாம், அசாமின் நகான் நகரில் உள்ள எல்பின்ஸ்டோன் பிபாபவனில் நடத்தப்பட்டது.

இங்கு மாற்று திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மூன்றுசக்கர வண்டி, சர்க்கர நாற்காலி, ஊன்று கோல், ஸ்மார்ட் குச்சிகள், ஸ்மார்ட்போன்கள், காதுகேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன.

அசாமில் வட்டார அளவில் நடத்தப்படும் உதவி முகாம்களில், 4,147 பயனாளிகளுக்கு, ரூ.261.15 லட்சம் மதிப்பிலான 7,585 உதவி பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தவார்சந்த் கெலாட் பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கு, பிரதமர் தலைமையின் கீழ், சமூக நீதித்துறை அமைச்சகம் புதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. மாற்று திறனாளிகளுக்கான பிரிவு 7-லிருந்து 21 ஆக அதிகரிக்கபட்டுள்ளது. அரசுவேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீடு 3-லிருந்து 4 சதவீதமாகவும், கல்வியில் 5 சதவீதமாகவும் அதிகரிக்கபட்டுள்ளது. நாடுமுழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப்பட்ட அடையாளஅட்டைகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.