நேற்றைய தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பத்திரிகையாளர் #மாலன் பேசியது பலரையும் ஆச்சர்யத்தை உண்டாக்கியது. எப்போதும் பொறுமையான முறையில் பதில் அளிக்கக்கூடிய #மாலனே நேற்று #ஆளுர்_ஷா_நவாஸிடம் கோவப்பட்டு விட்டார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்து ஏற்புடையதா என்ற கோணத்தில் விவாத நிகழ்ச்சியை நடத்தியதில் இதில்கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஷா நவாஸ் ஒரே நாடு ஒரு தேர்தல் பின்னணியில் #பாஜகவின் மிக பெரிய மதவெறியாட்டம் உள்ளது என்றும் இது இந்தியாவின் பன்முக தன்மையை சிதைக்கும் செயல் என்று கூறி கடுமையாக பாஜகவை விமர்ச்சித்து பேசினார்.

ஒரு கட்டத்தில் நேற்று இப்படித்தான் #பெரியார் வாழ்க தமிழ் வாழ்க என்று கோசம்போட்டால் பதிலுக்கு பாஜகவினர் #ஜெய்ஸ்ரீ_ராம் என்று கோசம் போடுகிறார்கள் ஒரு மதசார்பற்ற அரசை நடத்தும் பாராளுமன்றத்தில் எவ்வாறு ஒரு மதத்தை பிரதிபலிக்கும் ஜெய்ஸ்ரீராம் கோசத்தை எழுப்பலாம் என்று மிகப்பெரிய அளவில் கோவப்பட்டு பேசினார்.

இதுவரை பொறுமையாக இருந்த மாலன் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஜெய்ஸ்ரீராம் கோசம் போட்டால் என்ன தவறு இருக்கப்போகிறது, அவர்கள் அதை சொல்லித்தான் வாக்கு கேட்டார்கள் என்று கோவப்பட்டுவிட்டார் அத்துடன் #ஹைட்ரபாத் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.வே.ஷி #அல்லாஹூ_அக்பர் என்று சொல்லி பதவி ஏற்கும் போது ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை, ஏன் அதை சொல்ல மறுக்கிறீர்கள் என்றும் வெளுத்துவங்கிவிட்டார்.

பெரும்பான்மையினர் ஜெய்ஸ்ரீராம் சொன்னால் மதவாதம் சிறுபான்மையினர் அல்லாஹூ அக்பர் சொன்னால் உரிமையா என்று கேட்க ஆளூர் ஷா நவாஸ் பதிலக்கமுடியாமல் அது பதிலுக்கு சொன்ன வார்த்தை என்று மழுப்ப ஆரம்பித்துவிட்டார்.

ஷா நவாஸ் போன்றவர்கள் எதற்கெடுத்தாலும் மோடியை எதிர்த்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் பேசி வருவது பத்திரிகையாளர்களையே கோவப்பட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.