மியான்மர் எல்லையில் முகாம் அமைத்துள்ள நாகாலாந்து விடுதலைஇயக்க ஆதரவு தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் இன்று அதிகாலை எல்லைதாண்டி 'துல்லிய தாக்குதல்' நடத்தியது.

இந்திய மியான்மர் எல்லையில் அடர்ந்த வனங்கள் மற்றும் ஆறுகள்உள்ளன. இதனைப் பயன்படுத்தி அங்கு சிலதீவிரவாத ஆதரவுக் குழுக்கள் முகாமிட்டுள்ளன. அவர்களில் நாகாலாந்தில் இருந்து செயல்படும் என்.எஸ்.சி.என் அடிப்படைவாத குழுவுக்கு ஆதரவான தீவிரவாதகுழுக்களும் முகாம் அமைத்துள்ளன.

சமீபத்தில் இந்தியாவுக்கு அகதிகளாக வந்த ரோஹிங்யா இஸ்லாமியர்களுடன் இவர்களும் இணைந்து உள்ளேவந்து குழப்பங்களை உண்டாக்குவதாக உளவுத்துறை அறிக்கை தந்திருந்தது. அதன்பேரில் இத்தகைய முகாம்கள் மீது இந்திய ராணுவம் இன்று அதிகாலை எல்லை தாண்டி 'துல்லியதாக்குதல்' நடத்திய தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாலை 04.30 மணி அளவில் விமானத்தில் இருந்து 'பாரா ஜம்பர்ஸ்' எனப்படும் படையணியைச் சேர்ந்த 70 வீரர்கள் எல்லையில் இறக்கிவிடப்பட்டனர். எல்லையில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவி அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்ததாக்குதலில் அதிக அளவில் தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் ஈடுபட்ட வீரர்கள் அனைவரும் எந்த வித சேதமும் இல்லமல் தங்கள்தளத்துக்கு திரும்பி உள்ளனர்.

இதுகுறித்து கொல்கத்தாவை தலைமை யகமாகக் கொண்ட ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, "மியான்மர் எல்லையில் நாகாலந்து தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு இன்று (புதன்கிழமை) அதிகாலை முதலே தொடங்கப்பட்டது. தீவிரவாதிகள் மீது  இந்திய ராணுவத்தினர் கடும்தாக்குதல் தொடுத்தனர்.

இந்தத் தாக்குதலில் தீவிரவாதிகள் தரப்பில் பலஇழப்புகள் ஏற்பட்டுள்ளன. ராணுவ தரப்பிற்கு எந்தபாதிப்பும் ஏற்படவில்லை.

தொடர்ந்து மியான்மர் எல்லையில் நாகாலாந்து தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த தேடுதல் வேடையில் இந்திய ராணுவத்தினர் சர்வதேச எல்லையை கடக்கவில்லை” என்றார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம், இந்திய ராணுவத்தினர் மியான்மர் எல்லையில் நாகாலாந்து தீவிரவாதிகளுக்கு எதிராக துல்லியதாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத் தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.