அமித்ஷாவின் ‘மிஷன் காஷ்மீர்’! ஆகஸ்ட் 15-இல் பட்டிதொட்டிகளில் எல்லாம் தேசியக்கொடி ஏற்ற அதிரடி உத்தரவு!!

காஷ்மீர் உள்ள கிராமங்களிலும், பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை. இதற்கு அங்குள்ள முஸ்லிம் பிரிவினை வாதிகள் அனுமதிப்பதில்லை.

காஷ்மீரில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்களும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை. தங்கள் வீட்டுப்பிள்ளை களையும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கல்வி நிலையங்களுக்கு அனுப்புவதில்லை.

காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேரோடும், வேரடிமண்ணோடும் ஒழிக்கும் மகத்தான பணியை கையில் எடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த ஆண்டு காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களிலும், அதன் பஞ்சாயத்து தலைவர்களால் கொடியேற்றும் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 15-இல் நடத்த உத்தர விட்டுள்ளார்.

காஷ்மீரில் களையெடுக்கும் பணிக்கு, மத்திய அமைச்சர் அமித் ஷா ‘மிஷன் காஷ்மீர்’ என்று பெயர் சூட்டி உள்ளார்.

ஏற்கனவே காஷ்மீர் சென்ற அமித்ஷா, அங்கு பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித்தோவலும் காஷ்மீர் உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார்.

இதனிடையே, ஆகஸ்ட் 15-இல் சுதந்திரதின கொண்டாட்டத்தை தொடர்ந்து, 370-பிரிவையும் நீக்குவதற்கு அமித் ஷா திட்டமிட்டு உள்ளார்.

அமித்ஷா ‘மிஷன் காஷ்மீர்’ ஆபரேஷனுக் காகத்தான் கடந்த சிலநாட்களில் சுமார் 12,000 பாதுகாப்பு படையினர் கூடுதலாக அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.இதனால், காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளும், அவர்களுக்கு துணைபோகும் காஷ்மீர் முஸ்லிம்களும் பீதியடைந்துள்ளனர். அமித்ஷாவின் அதிரடியால் அவர்கள் நிலைகுலைந்து போய் உள்ளனர்.

‘மிஷன் காஷ்மீர்’ ஆபரேஷனுக்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள தேச துரோகிகளை களையெடுக்க அமித்ஷா முடிவு செய்துள்ளார். இதனால், தமிழகத்தில் உள்ள தேசதுரோக கும்பல் இப்போதே கலக்கம் அடைந்து உள்ளன

Comments are closed.