ஏவுகணை எதிர்த்தாக்குதல்களை சமாளிக்கும் திறன்உடைய ASAT இன்ரு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் நரேந்திரமோடி இன்று அறிவித்தார். மேலும், சர்வதேச அளவில் இம்முயற்சி எந்தவொரு நாட்டுக்கும் எதிரானது அல்ல என்றும் மோடி தெளிவுபடுத்தினார்.

மிஷன் சக்தி ஆபரேஷன் மிகவும் கடினமான சாதனை என்று பெருமைகொண்ட மோடி இந்தியா சூப்பர்விண்வெளி சக்தியைப் பெற்றுள்ளதாகவும் அறிவித்தார். பிரதமர் மோடியின் அறிவிப்பில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்:

1. இன்று இந்தியாவிடம் விவசாயம், பேரிடர்மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், வானிலை எனப் பல துறைகள் சார்ந்தும் செயற்கைக்கோள்கள் உள்ளன.

2. இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதாரவளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றுக்கான முக்கியமான படிதான் ‘மிஷன் சக்தி’ ஆப்பரேஷன்.

3. விண்வெளியில் சக்திமிகுந்த சாதனையை இந்தியா இன்று மார்ச் 27-ம் தேதி படைத்துள்ளது. இதுவரையில் சர்வதேச அளவில் 3 நாடுகள் – அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியநாடுகள் மட்டுமே இச்சாதனையைச் செய்துள்ளன. இச்சாதனையைப் படைத்த நான்காம் நாடு இந்தியா.

4. இந்தியாவின் இப்புதிய ஏவுகணை சாதனை இந்தியாவுக்குப் புதிய பலத்தை கொடுத்துள்ளது. இதுமுற்றிலும் இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மட்டுமே அன்றி வேறுயாருக்கு எதிராகவும் உபயோகப்படுத்த அல்ல.

5. இது எந்த சர்வதேச சட்டநடைமுறைகளையும் ஒப்பந்தங்களையும் மீறிய செயல் அல்ல

6. ஒவ்வொரு நாட்டின் பயணத்திலும் பெருமைமிகு நிகழ்வுகள் நடக்கும். அது காலத்துக்கும்வரும் தலைமுறையினருக்கும் வரலாற்றுச் சான்றாக நிற்கும். அத்தகைய நாள்தான் இன்று.

7. எதிரிகளின் விண்வெளித் தாக்குதல்களை எதிர்த்துநிற்கும் திறன் கொண்டது ASAT ஏவுகணை. மிஷன்சக்தியில் ஈடுபட்ட அனைவருக்கும் இது பெருமை.

8. மிஷன்சக்தி மிகவும் கடினமான சவால். மிகவும் துல்லியமாக அதிவேகத்தில் இந்த ஏவுகணை ஏவப்பட்டது. இது இந்தியவின் பெருமைமிகு அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் நமது விண்வெளி திட்டங்களின் திறனைக்காட்டுகிறது.

9. மிஷன்சக்தி மூலம் விண்வெளியில் நமது நாட்டுக்கு சூப்பர் பவர் கிடைத்துள்ளது. உலகில் இந்த சக்தியைப் பெறும் நான்காம் நாடாக நாம் உள்ளோம்.

10. இந்த முயற்சி முற்றிலும் உள்நாட்டிலேயே விளைந்ததாகும்.

Leave a Reply