இந்து முன்னனியின் செய்தி தொடர்பாளராக இருந்த சசிகுமார், முகநூல் மூலமாக ஐ எஸ் ஐ எஸ் மற்றும் லக்ஷர் இ தைபா குறித்து பல பதிவுகளை பதிந்து வந்திருக்கிறார். இதனால் இவருக்கு பயங்கரவாதிகளிடமிருந்து மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறை இவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தது. ஆனால் இரண்டு மாதம் முன்புதான் காவல்துறை பாதுகாப்பை விலக்கியுள்ளது.

சமீபத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், 233 சிலைகளை ஏற்பாடு செய்து, முக்கிய பிரமுகர்களை வரவழைத்து ஒரு பிரமாண்ட பேரனியை நடத்தி காட்டியுள்ளார் சசிகுமார். இதனால் மதவெறியர்கள் கலக்கம் அடைந்துள்ளார்கள்.

மேலும் சசிகுமாரின் முகநூல் பதிவுகள் சிலவற்றை குறித்து மிக கடுமையாக அவரின் இன்பாக்ஸில் மிரட்டி உள்ளார்கள் பயங்கரவாதிகள். இரண்டு நாள் முன்பு சசிகுமாரிடம் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் பயங்கரவாதிகள். இது குறித்து அவர் காவல்துறையில் புகார் செய்ய, அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது காவல்துறை. சம்பவத்தன்று செல்ஃபோனில் ஒருவர் சசிகுமாரிடம் ஒரு மணி நேரம் பேசி மிரட்டியுள்ளான். அதன் பின் சற்று நேரத்தில் அவர் காந்திபுரத்தில் இருந்து துடியலூரில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பிய வேளையில் அவரை இரண்டு இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து கொன்றுள்ளார்கள் பயங்கரவாதிகள்.

காவல்துறையின் மெத்தனத்தால்தான் இது நடந்துள்ளது என்று இந்து முன்னனியினர் இதை குறிப்பிட்டுள்ளனர்.

நன்றிகள் பல பாலிமர் நியூஸ் சேனல்

Leave a Reply