பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்த முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 23ம் தேதி தொடங்குகிறது.

25ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 29ம் தேதி மத்திய பொதுபட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று காலை ஆலோசனை  நடத்த உள்ளார். இதில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற இருஅவைகளின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply