எனக்கு சிலகேள்விகள். முதல் நாள் என்ன கோரிக்கை.அலங்கா நல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலைசெய் என்பது.மறுநாள் முதல்வர் வரணும் என்பது கோரிக்கை. 
 
மூன்றாவது நாள் ஓபிஎஸ் அறிக்கைவேண்டும். அதை பார்த்து விட்டுத்தான் கலைவோம். அறிக்கை வந்தது பாலகிருஷ்ணன் படித்தார். 
 
அதெல்லாம் முடியாது அவசர சட்டம் கொண்டு வரணும் என்ற கோஷம் எழுந்தது.ஓபிஎஸ் டெல்லி போனார். அவசர சட்டம் வருவது போன்ற சூழல்வந்தவுடன் அதெல்லாம் முடியாது நிரந்தர சட்டம் வேண்டும் என்று இப்போது கூறுகிறார்கள். 
 
ஒரு தமிழனாவது நான் ஏன் தினம் தினம் இப்படி கோரிக்கையை மாற்றுகிறேன் என்றுகேட்டார்களா? முதல் நாள் கோரிக்கைக்கும் கடைசி நாள்கோரிக்கைக்கும் எவ்வளவு வித்யாசம்.
 
முதலிரண்டு நாட்கள் கட்டுகோப்பாக இருந்த போராட்டம் அடுத்தடுத்த நாட்களில் கட்டுகோப்பாக இருந்ததா?
 
 மீடியா செய்தியாளர்களை திட்டுவதும் அடிப்பதும் கட்டுக்கோப்பான போராட்டமா? மீடியாக்கள் இன்று பொறுப்புடன் நடக்கிறதா? தனித்தனியாக உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும் கூட்டத்திடம் தனி ஆட்களிடம் உங்கள் கருத்து என்ன என்று எதை பதிவு செய்கிறீர்கள். 
 
கடற்கரைக்குள்ளே நல்லா கான்கிரீட் போட்டு உட்கார்ந்து இருக்கும் மே17, மக இக , கூடங் குளம் டீம், எஸ்டிபிஐ , இன்னும் பிற அமைப்புகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல் மேலும் மேலும் வளர்க்கிறார்களே அது பற்றி யாரும் மூச்டுக்கூட விடவில்லையே. 
 
வெளியே கோடிக்கணக்கில் இருக்கும் பொதுமக்கள் மவுனமாக இதை பார்க்கிறார்களே அவர்கள் கருத்து என்ன? . முடிவுரா போராட்டம் மூலம் நாளை பலப்பிரயோகம் நடந்தால் போலீஸ் கலைத்தால் வன்முறை தானே வெடிக்கும். இதுவும் தவறான வழிகாட்டுதல் தானே. 
 
நாளை இதேபோன்று பொது விஷயத்துக்கு கூடினால் மற்றவர்கள் எப்படி பார்ப்பார்கள். அரசாங்கத்துக்கு டைம் கொடுத்து குறித்த காலத்துக்குள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் கூட தயங்க மாட்டோம் என்றால் அரசுக்கும் பயமிருக்கும்.
 
 முடிவுரா போராட்டம் எதையும் சாதிக்காது. அதுவும் ஒரு வகையில் வன்முறையில் தான் முடியும்.

Leave a Reply