என்னைபேச அனுமதித்தால் பூகம்பம் வந்துவிடும்’, என மத்திய அரசுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ‘நாடாளுமன்றத்தில் ரூபாய்நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும்கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை. இது குறித்த விவாதத்தில் பங்குபெற அவர்கள் தயாராகஇல்லை’, என்று குற்றம்சாட்டினார். 

’என்னை பேச விட்டால் பூகம்பம் வந்துவிடும்’, என ராகுல்காந்தி எச்சரித்ததைத் தொடர்ந்து பாஜக தரப்பில் கடுமையாக விமர்சிக்கப் பட்டு வருகிறார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், ’ராகுல் சொல்கிறார், கறுப்புப் பண ஒழிப்பைப்பற்றி அவர் பேசினால் மிகப் பெரிய நில நடுக்கமே வருமாம். முதலில் அவர் 'கை' கால் நடுக்கம்இல்லாமல் பேசட்டும்’ என விமர்சித்துள்ளார்.

 

Leave a Reply