சர்வதேச சூழல்காரணமாக பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட் டுள்ளது. இதன் காரணமாக முதலீட் டாளர்கள் பதற்றப்பட தேவையில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்தார்.

கடந்த வியாழன் அன்று பிஎஸ்இ சென்செக்ஸ் 807 புள்ளிகள் சரிந்தது. அதன் தொடர்ந்து பேசிய அருண் ஜேட்லி மேலும் கூறியதாவது.

பங்குச்சந்தை சரிவு குறித்து முதலீட் டாளர்கள் அதிகபதற்றம் கொள்ளத்தேவை இல்லை. நாட்டின் பொருளாதார அடிப்படை பலமானது என்பதை முதலீட் டாளர்கள் மனதில்கொள்ள வேண்டும். சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சரிவின் தொடர் நிகழ்வாக இந்திய சந்தையிலும் விற்கும் போக்கு அதிகரித்தது. சந்தைசரிவதற்கு இந்தியாவுக்கு வெளியே பலகாரணங்கள் உள்ளன. அமெரிக்க மத்திய வங்கி வட்டிவிகிதம் குறித்த தெளிவான முடிவு எடுக்காதது, சீனாவில் ஏற்பட்டுள்ள மந்தநிலைமை, ஐரோப்பிய நிலவரம் ஆகிய சர்வதேச காரணங்களால் இந்தியாவிலும் சரிவு ஏற்பட்டது.

அதனால் முதலீட்டாளர்கள் அதீத பதற்றப்பட தேவை இல்லை. சர்வதேச பொருளாதாரம் மோசமான சூழ்நிலையிலும்கூட இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கு தேவையான கொள்கைகளை உருவாக்கி வருகிறது.

சர்வதேச மந்த நிலையிலும் கூட சேவை மற்றும் உற்பத்திதுறை வேகமாக மீண்டுவருகிறது. பருவமழை மற்றும் தேவை உயர்வுகாரணமாக இந்த துறைகளின் வளர்ச்சி மேலும் உயரலாம்.

வங்கிகளின் வாராக் கடனை குறைப்பதற்கு பல யோசனைகளை மத்திய அரசு பரிசீலனை செய்துவருகிறது. இந்த பிரச்சினை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும். இந்த கடன்கள் சில வருடங்களுக்கு முன்பு கொடுக்கப் பட்டவை. வங்கிகளின் நிதிநிலை வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதற்காக அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கடன் செலுத்தாத வர்களிடம் இருந்து கடனை வசூலிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை வங்கிகள் எடுத்துவருகின்றன.

பொதுத் துறை வங்கிகளுக்கு தேவைப்படும் நிதியை மத்திய அரசு வழங்கும். இந்திய பொருளாதாரத்தில் வங்கிகளுக்கு முக்கியபங்கு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வங்கிகளை பலப்படுத்துவது அவசியம் என அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.