தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரதமருக்கு முதல்கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி மு.பழனிசாமி 16.2.2017 அன்று பதவி ஏற்றுக் கொண்டதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனக்கு வாழ்த்துதெரிவித்த பிரதமருக்கு, முதலமைச்சர் பழனிசாமி தனது நன்றியினைத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழக மேம்பாட்டுக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply