உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளர் போட்டியில் நான் இல்லை’ என உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறினார்.

 

சமீபத்தில் நடந்துமுடிந்த அசாம் சட்டசபை தேர்தலுக்கு முதல்-மந்திரி வேட்பாளரை முதலிலேயே அறிவித்தது போல, உத்தரபிரதேச தேர்தலுக்கும் முதல்மந்திரி வேட்பாளரை அறிவிக்க கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

உத்தரபிரதேச முதல்மந்திரி வேட்பாளராக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வருண் காந்தி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. எனினும் ராஜ்நாத் சிங்தான் கட்சியின் முதல்தேர்வு என டெல்லி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இவர் உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்மந்திரி என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆனால் இந்த தகவல்களை முதலில் மறுத்த ராஜ்நாத் சிங், எனினும் கட்சிவழங்கும் பொறுப்புகளை ஏற்க தயார் என பின்னர் கூறினார். லக்னோ அருகே உள்ள சர்பாக் ரெயில்நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு உள்ள திட்டங்களை நேற்று தொடங்கிவைத்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இதை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘முதல்-மந்திரி வேட்பாளராக நான் அறிவிக்கப் படுவேன் என்று வெளியாகி உள்ள தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படை யிலானது, ஆதாரமற்றது. அப்படி எந்த ஒருபோட்டியிலும் நான் இல்லை. அதேநேரம் கட்சித்தலைமை எனக்கு எந்தபொறுப்பை வழங்கினாலும் அதை விட்டு விட்டு நான் ஓடமாட்டேன்’ என்றார்.

Leave a Reply