கடும் விவாதத்திற்கு மத்தியில் முத்தலாக் தடை மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. ஓட்டெடுப்பு துவங்கும் முன்னதாக காங்கிரஸ்., சமாஜ்வாடி , அதிமுக, உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்புசெய்தன. மேலும் மசோதாவில் திருத்தம்கொண்டு வரவேண்டும் என்ற ஓவைசி மற்றும் எதிர்கட்சிகள் எம்.பி.,க்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை.

4 மணிநேரம் நடந்த விவாதத்திற்கு பின்னர் நடந்த ஒட்டெடுப்பில் மசோதாவிற்கு ஆதவராக 245 பேரும், எதிராக 11 பேரும் ஓட்டளித்தனர். முத்தலாக் தடைசெய்யும் மசோதா, எந்த மதத்தினருக்கும், எந்தவொரு நம்பிக்கைக்கும் எதிரானது இல்லை. பெண்களின் நலன்கருதியே கொண்டுவரப்பட்டுள்ளது. மனிதநேயம் மற்றும் நீதிக்கானது. திறந்தமனதுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினர் கருத்தையும் அரசு கேட்டுகிறது.இந்தமசோதா பாலின சமத்துவத்தை உறுதி செய்கிறது.

இந்தியாவின் மகள்களுக்கு நீதிவழங்குகிறது. அனைவரையும் சமமாக கருத வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அரசு செயல்படுகிறது. சட்டத்திற்கு விரோதமானது என சுப்ரீம்கோர்ட் கூறியுள்ளது. எந்த மதத்தினருக்கும், எந்தவொரு நம்பிக்கைக்கும் எதிரானது இல்லை

முத்தலாக் குறித்து முன்னர் கொண்டு வந்த மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. மசோதாவில் திருத்தம் செய்தபோது, எதிர்க்கட்சிகள் கருத்துகளை பரிசீலனை செய்தோம். நேற்றுகூட ஐதராபாத், ஒடிசாவில் முத்தலாக் கூறி விவாகரத்து நடந்துள்ளது. மதசார்பற்ற இந்தியாவில் மசோதாவை எதிர்ப்பது ஏன்? பெண்களை உயர்வுக்கும் சுயமரியாதைக்கும் அரசு பாடுபட்டு வருகிறது. யாரையும் பழிவாங்க விரும்பவில்லை. பார்லிமென்ட்டில் அனைவரும் ஒரேகுரலில் பேச இதுவே சரியானதருணம். இவ்வாறு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசினார்.

விவாதத்திற்கு பின்னர் எதிர்கட்சிகளுக்கு பதில் அளித்த அமைச்சர் ரவிசங்கர் பேசுகையில்:வரதட்சணை கொடுமை தண்டனைக்குரிய குற்றம்ஆகும் எனும் போது முத்தலாக்கை ஏன் நியாயப்படுத்த வேண்டும். இந்தவிவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் லாபம்தேட முயற்சிக்கிறது. நியாயத்திற்காகவும், மகளிரின் உரிமைக்காகவும் ஆனது. முத்தலாக்கால் பாதிக்கப்பட்டோர் பலர் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 3 ஆண்டு சிறைத்தண்டனை என்பது முழுவிசாரணைக்கு பின்னர்தானே வருகிறது. அதுவரை மாஜிஸ்திரேட் நினைத்தால் சம்பந்தப்பட்டவரை ஜாமினில் விடமுடியும். பலநாடுகளில் தடையில் இருக்கும்போது இந்தியாவில் ஏன் அமல்படுத்தக்கூடாது ? இவ்வாறு அவர் பேசினார்

Leave a Reply