தற்கொலை செய்துகொண்ட ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழக ஆய்வுமாணவர் முத்துகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரது குடும்பத்தாரிடம் நலம்விசாரித்தார்.
புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவராகப் படித்துவந்த, சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன், கடந்த மார்ச் 13-ஆம் தேதி புதுதில்லியில் தற்கொலை செய்துகொண்டார்.
இதனிடையே சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில்சென்றார்.


அங்கு அவர் அவரது தாய், தந்தை, மூத்தசகோதரி ஆகியோரை சந்தித்து அவர்களின் குடும்ப நலன்குறித்து கேட்டறிந்து, குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.மாணவர் முத்துகிருஷ்ணனின் மரணம்குறித்து வழக்குப் பதியவும், அவரது உடலை பிரேதபரிசோதனை நடத்திடவும் உறுதுணையாக இருந்ததும், அவரது உடலை விமானம் மூலம் சென்னை கொண்டு வந்து பிறகு சேலத்துக்கு எடுத்து வர பல்வேறு வகையில் உதவியதற்கு முத்துகிருஷ்ணனின் குடும்பத்தினர் இணை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply