பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப் பட்ட பலர் மாற்றுக் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். மேலும், பலதுறைகளை சேர்ந்த பிரபலங்களும், சில மாநிலங்களை சேர்ந்த ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தங்களுக்கு விருப்பமான கட்சிகளில் இணைந்து கொண்டிருக் கின்றனர்.

அவ்வகையில், ஒடிசாமாநில காவல்துறை முன்னாள் டி.ஜி.பி. பிரகாஷ் மிஷ்ரா மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு டிஜிபி. பிரகாஷ் மிஷ்ராவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர், அவரை நிரபராதி என்று சுப்ரீம்கோர்ட் விடுதலை செய்தது. தற்போது பாஜகவில் இணைந்துள்ள பிரகாஷ் மிஷ்ரா, ஒடிசாவில் உள்ள கட்டாக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply