நோட்டு அறிவிப்பால் சுமார் 50 நாட்கள் சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே எதிர்காலப் பயனைக் கருத்தில் கொண்டு தற்காலிக சிரமத்தை பொறுத்துக்கொள்ளுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்கள் கரன்சி ஒழிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒய்.வி. ரெட்டி

சரக்கு, சேவை வரியை அமலாக்குவதற்கு முன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரவேற்கத் தக்கது. எந்த மகத்தான மாற்றத்தையும் சில அசௌகரியங்கள் இன்றி அமலாக்குவது சாத்தியமானது அல்ல.

சி. ரங்கராஜன்

கடந்த காலத்திலும் சில முறை இதே போல அதிக மதிப்புடைய கரன்சிகள் ஒழிக்கப்பட்டுள்ளன. கருப்புப் பணம், கள்ளப்பணம், பயங்கரவாதப் பணம் ஆகிய மூன்றையும் ஒருசேர வீழ்த்த பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. காகித கரன்சியிலிருந்து மின்பரிமாற்றத்தை நோக்கி பொருளாதாரம் நகர்ந்துகொண்டிருக்கிறது. பிரதமர் மோடி எடுத்துவரும் நடவடிக்கை தேசத்தை எழுச்சி பெற வைக்கும்.

டி. சுப்பாராவ்

வங்கிகளில் டெபாசிட் தொகை குவிந்துகொண்டே இருக்கிறது. இதன் மூலம் வங்கிகளின் கடன் அளிப்பு திறன் உயருகிறது. குறைந்த வட்டியில் வங்கிகளால் கடன் கொடுக்க முடியும். இது பொருளாதாரத்தை நிச்சயமாக மேம்படுத்தும். வேலைவாய்ப்பு பெருகும். ஒட்டுமொத்த வளர்ச்சி உயர்ந்தோங்கும்.

பிமல் ஜலான்

நான்கு மாதங்களுக்குள் எழுச்சிகரமான மாற்றங்கள் தென்படத் தொடங்கும்.

மக்களுக்கு சிநேக பூர்வமானவையாக வங்கிகள் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். கிராமங்களிலும் குக்கிராமங்களிலும் வங்கி வசதிகளை ஏற்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக விவசாயிகளையும், விவசாய கூலிகளையும் வங்கி சேவை சென்றடையவேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் எதற்காக அதிக மதிப்புடைய கரன்சிகள் ஒழிக்கப்பட்டனவோ அந்த நோக்கம் ஈடேறிவிடும்.

 

கரன்ஸி தட்டுப்பாடு: கடைவீதி அனுபவம்

துளசிமணி, மளிகை வியாபாரி, தாம்பரம்

நான்கு நாட்கள், சில்லறை தட்டுப்பாட்டால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. தற்பொழுது சீரடைந்து விட்டது. இது பிரதமரின் துணிச்சலான நடவடிக்கை. எங்கள் வாடிக்கையாளர்கள் நடுத்தர, ஏழை குடும்பங்களை சேர்ந்தோர் தான். அவர்களுக்கு ஓரளவு சிரமம் இருக்கிறது. இருப்பினும் பெரும்பாலோனர் வரவேற்கவே செய்கின்றனர்.

 

அருளானந்தம், மளிகை வியாபாரி, சேலையூர்

எனக்கு கஸ்டமர் சில பேர், பொருள் வாங்கி 500 ரூபாய் கொடுக்கறாங்க, நான் சரியா கணக்கு வச்சிருக்கறதாலே அதை நான் வங்கில டெபாசிட் பண்றேன். எனக்கு பொருள் சப்ளை பண்றவங்களுக்கு நான் எப்பவுமே செக் தான் தரேன். எனக்கு வியாபாரம் நார்மலாதான் இருக்கு. – சிவராமகிருஷ்ணன்

 

Leave a Reply