முரண் பாடுகளை நிர்வகிப்பதில்  இந்தியர்கள் வல்லவர்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
 மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் நடைபெற்று வரும் சிம்ஹஸ்த கும்பமேளாவையொட்டி "வாழும் வழி முறை' தொடர்பான 3 நாள் மாநாட்டின் நிறைவுவிழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில், மோடி பங்கேற்றுப் பேசியதாவது:


 உலகில் புவி வெப்ப மயமாதல், பயங்கரவாதம் என இரண்டுவகையான அச்சுறுத்தல்கள் உள்ளன. "உன் வழியை விட எனது வழியே சிறந்தது' என்ற மனப் பான்மையே இந்த முரண்பாடுகளுக்கு காரணமாகும். ஏகாதிபத்தியமும் நம்மை முரண் பாடுகளை நோக்கித் தள்ளுகிறது. தற்போது காலம் மாறிவிட்டது. ஏகாதிபத்தியம் என்பது பிரச்னைகளுக்குத் தீர்வல்ல என்பது தெரிந்து விட்டது.


 இந்தியர்களாகிய நாம், முரண்பாடுகளை எப்படிகளைவது என்பதை நமது மரபிலேயே அறிந்து வைத்துள்ளோம். தந்தையின்சொல்படி கேட்ட ராமரையும் நாம் வழிபடுகிறோம்; அதேநேரத்தில், தந்தையின் சொற்களைக் கேட்க மறுத்த பிரஹலாதனையும் போற்றுகிறோம். கணவனை தெய்வமாகமதித்த சீதையையும், கணவனை மறுத்து இறைவனைப் போற்றிய மீராவையும் கொண்டாடுகிறோம்.


 கடந்த சில ஆண்டுகளாக, சர்வதேச புவிதினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏற்கெனவே, இந்தியர்கள் தினமும் காலையில் எழுந்ததும், தரையில் கால்வைப்பதற்கு முன் பூமியைத் தொட்டு மன்னிப்பு கோரும் வழக்கத்தைக் கடைபிடித்து வருகிறோம்.


 துறவிகளிடம் அனைத்து சக்திகளும் அடங்கியுள்ளன. அவர்கள் சமுதாய நலனுக்காக தன்ன லமற்ற முறையில் செயல்பட்டால், சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இந்தமாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் 51 அம்சங்களும், எதிர் காலத்தில் உலகில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன.
 அமெரிக்காவில் தற்போது நடைபெற்றுவரும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் குடும்பமரபுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தியாவிலோ ஏற்கெனவே குழந்தை பிறந்ததுமே நற்பண்புகளும், கொள்கைகளும் போதிக்கப் படுகின்றன என்றார் மோடி.


 நிறைவு விழாவில், 51 அம்சங்கள் அடங்கிய 'சிம்ஹஸ்த பிரகடனத்தை' பிரதமர் மோடி, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் செளஹான் ஆகியோர் கூட்டாக வெளிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *