பாகிஸ்தானில், சீனதூதரக அலுவலகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தபிறகு, பாகிஸ்தான் மீதான சீனபாசம் குறைந்து விட்டதாக தோன்றுகிறது. அதற்கு ஏற்றவாறு, சீன அரசு 'டிவி' சேனல் ஒன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட, முழுகாஷ்மீரும் இந்தியாவுக்குதான் சொந்தம் என்பது போன்ற வரைபடத்தை காட்டியுள்ளது.
 

பாகிஸ்தானின் கராச்சி நகரில், சீன தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த வாரம், மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், உடல்களில் வெடிகுண்டுகளை கட்டிவந்த மூன்று பயங்கரவாதிகள், இரண்டு போலீசார் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். 

சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் குழுத்தைசேர்ந்த சிஜிடிஎன்'டிவி' சேனல், இந்ததாக்குதல் குறித்து நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது. அப்போது பாகிஸ்தான் வரைபடம் காட்பட்டது. அதில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட முழுகாஷ்மீரும் இந்தியாவுக்குள் இருப்பது போல காட்டப்பட்டது. 

இது தவறுதலாக நடந்ததா அல்லது வேண்டும் என்றே செய்யபட்டதா என்பது தெரியவில்லை. எனினும், பாகிஸ்தான் அரசும், அதன் ராணுவமும் அதிருப்தி அடையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 

Leave a Reply