மு.க.ஸ்டாலின், சீமான் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியி ருப்பதற்கான உள்நோக்கம் புரிய வில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை கோடம் பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த 5 நாள்களாக ரசிகர்கள் ரஜினி காந்த் சந்தித்துவந்தார்.

கடைசி நாளான வெள்ளிக் கிழமை அவர் ரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றினர். அப்போது அவர் பேசுகையில் , முக.ஸ்டாலின் சிறந்த நிர்வாகி, சீமான் சிறந்தபோராளி, அவரது பேச்சுகளை கேட்டு நானே பிரமித்திருக்கிறேன். தொல் திருமாவளவன் திறமைசாலி, அன்புமணி ராமதாஸ் புதுமையைபுகுத்துபவர் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து நாகர் கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. அவர் பாஜக.,வில் இணைந்தால் மகிழ்ச்சி அடைவோம்.

அரசியலுக்கு வரவேண்டுமா அல்லது பாஜகவில் இணைய வேண்டுமா என்பது அவரது தனிப்பட்ட விருப்ப மாகும். ஆனால் போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிறாரே அதுதான் என்னவென்று புரியவில்லை.

ஸ்டாலின் சிறந்தநிர்வாகி, சீமான் சிறந்தபோராளி என்று ரஜினி கூறியிருக்கிறார். அதன் உள்நோக்கம் எனக்கு புரியவில்லை.தமிழகம் கடந்த பலஆண்டுகளாக நடிப்புத்துறையின் பிடியில்தான் இருக்கிறது என்பது தவறு. யார் எந்ததுறையில் இருக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. எப்படிப்பட்ட ஆட்சி என்பது தான் முக்கியம். என்னை பொறுத்த வரையில் தமிழகத்தில் பாஜக ஆட்சி தான் வரவேண்டும்.

 

தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்றமுடியாது என்று சிலர் கூறிவருகின்றனர். ஆனால் உண்மையை சொல்ல போனால், தமிழகத்தில் எந்த கட்சிகளுக்கும் கால்கள் இல்லை. ஊன்றியகாலையும் அதிமுகவும், திமுகவும் எப்போதோ இழந்து விட்டன. தமிழர்களின் பிரச்சினைகளை யார் சொல்லியும் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இல்லை என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

Leave a Reply