வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் மூங்கில்குச்சிகளை நிறுத்திவிட்டு, தமிழகத்தில் மூங்கில் மரங்களை வளர்க்க, தமிழக அரசு ஊக்குவிக்கவேண்டும்,'' என, மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பேஸ்: 2 பகுதியில் உள்ள தனியார்கம்பெனியில், முள் இல்லா மூங்கில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒருநாளைக்கு, ஒன்றரை அடி உயரம்வரை வளரும் இந்த மூங்கில் மரங்கள் குறித்து ஆய்வுமேற்கொள்ள, குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் ஓசூர் வந்தார்.

அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து, ஊதுபத்திகளை தயாரிக்க தேவையான மூங்கில்குச்சிகளை, 60 சதவீதம்வரை, இறக்குமதி செய்கிறோம். இந்தியாவில் ஊதுபத்திகளுக்கான தேவை அதிகமாக உள்ளதால், மூங்கில்குச்சி இறக்குமதியை நிறுத்திவிட்டு, மூங்கில் மரங்களை விவசாயிகள் வளர்க்க தமிழக அரசு ஊக்கப்படுத்தவேண்டும். சிறு, குறு தொழில்கள் துவங்க, வங்கிகளில் உத்தரவாதம் இல்லாமல் வழங்கப்பட்டுவந்த, ஒரு கோடி ரூபாயை, பிரதமர் மோடி, இரண்டு கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். சிறு, குறுந் தொழிற்சாலைகள் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலையில்தான் உள்ளது. மானியம், சட்ட பாதுகாப்பு, கடன் உதவி உள்ளிட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களை, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply