மத்தியில் பாஜக கூட்டணிஆட்சியின் மூன்றாண்டு கால ஆட்சிகுறித்து சாதனை விளக்க அறிக்கைவெளியிட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க் கட்சிகள் கூறிவரும் பல்வேறு குற்றச் சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து அடுத்தமாதத்துடன் 3 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்றன. இதையடுத்து, இந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு செய்தசாதனைகளை விளக்கி விரிவான அறிக்கைவெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதில், மத்திய அரசு அமல்படுத்திவரும் பல்வேறு திட்டங்கள் எந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டுவருகின்றன என்பது குறித்த புள்ளிவிவரங்கள் இடம் பெறும். இதற்காக மத்திய அரசின் ஒவ்வொரு அமைச்சகமும், பல்வேறு தலைப்புகளில் துறை ரீதியாக தங்களின் சாதனைகளின் பட்டியலை தயாரித்து அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள்; அவற்றின்பயன்கள், தூய்மை இந்தியா திட்டம், வேலை வாய்ப்பு உருவாக்கம், தொழில்துறை முன்னேற்றம், கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைகள், ஏழைமக்களுக்கான சிறப்புத்திட்டங்கள், மத்திய அரசுத் துறைகளில் லஞ்சம், ஊழல் இல்லாதது, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, விவசாய மேம்பாட்டு திட்டங்கள், இளைஞர் திறன்மேம்பாடு,

சிறுதொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் போன்றவை மத்திய அரசின் சாதனைவிளக்க அறிக்கையில் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:

Leave a Reply