முதல் & இரண்டாம் உலகப்போர்களின் போது போர்வீரர்கள்
குண்டுகளோடு அலைந்தார்கள்; இப்போது மூன்றாம் உலகப் போரில்
குடங்களோடு அலைகிறோம்…

போரின் கொடுமை தாங்க முடியாமல்சென்னை OMRல் உள்ள கணிசமான IT கம்பெனிகள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே (Work from Home) வேலைசெய்ய சொல்லியிருக்கிறார்களாம். வெறும் காசு பணத்தை வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது என்பதற்கு நிகழ்கால உதாரணமிது.

நிறைய உணவுவிடுதிகள் மூடப்பட்டு விட்டனவாம். அவற்றை நம்பியிருந்தவர்களுக்கு சோறு, தண்ணி இல்லாத சூழ்நிலை.

அபாயச் சூழலால் பள்ளிகளுக்கு விடுமுறை.

எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அரசும் மக்களும் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

கவனம், கவனம், கவனம்…

காசை தண்ணிபோல் (?) செலவழித்தாலும் இனி அவ்வளவு எளிதாக தண்ணீரைப் பெற்றுவிட முடியாது. மிகவும் கவனமாக இருப்போம். தற்போதைய உடனடித் தேவை – சிக்கனம். ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி.

வழக்கமாகத் தண்ணீரை அதிகமாக செலவழிக்கும் நானும் தற்போது மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துகிறேன். நீங்களும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன். செய்வீர்களா?

Tags:

Comments are closed.