மூன்றில் இரண்டு இந்தியர்கள் தரமற்ற, கலப்பட பாலை குடிக்கிறார்கள் என நாடாளு மன்றத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

  மக்களவையில் நேற்று கேள்விநேரத்தின் போது இந்த விவகாரம் குறித்து பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், ‘‘பாலில் உள்ள கலப்படபொருட்களை கண்டறிய ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான வேதியியல் பரிசோதனைகள் தேவைப்பட்டன. ஆனால் தற்போது ஒரே சோதனையில் பாலில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து கலப் படங்களையும் கண்டறிய முடியும். எம்பிக்கள் இந்த கருவியை வாங்குவதற்கு உதவவேண்டும்’’ என்றார்.

மேலும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரசான்று நிறுவனம் நடத்திய ஆய்வில், நாடுமுழுவதும் விற்பனை செய்யப்படும் பாலில் 68 சதவீதம் தரமற்றவை என தெரியவந்துள்ளது. இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply