தஞ்சாவூர், அரவக் குறிச்சி, திருப்பரங் குன்றம் ஆகிய மூன்றுதொகுதிகள் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங் குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித் தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 19-ம்தேதி தேர்தல் நடந்தது.

இந்நிலையில், தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிகளில் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மூன்று தொகுதிகளுமே அதிமுக வசமாகியுள்ளது. திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.

மூன்று தொகுதிகளிலும் பாஜக மூன்றாம் இடம்:

அதிமுக, திமுகவுக்கு அடுத்த படியாக பார்க்கப்பட்ட தேமுதி.,கவின் பலம் இந்ததேர்தலில் மேலும் சரிந்துள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக 2,803 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தேமுதிக- 1176 வாக்குகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.

தஞ்சாவூரில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றது. பாஜக 3806 வாக்குகள் பெற்றுள்ளது.   திருப்பரங்குன்றத்தில் பாஜக – 6930 வாக்குகள் பெற்றுள்ளது.

மூன்று தொகுதிகளிலும் தேமுதிகவைவிட பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது

Leave a Reply