டெல்லி ஏர்போர்ட் எக்ஸ்ப்ரஸ் மெட்ரோ ரயிலில் தவுலாகுவான் நிலையத்திலிருந்து துவாரகா வரை பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொண்டார். துவாரகாவில் சர்வதேச மாநாட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் எக்ஸ்போ மையம் திறப்புவிழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக மோடி சென்றார்.

சாலைமார்க்கமாக சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக அவர் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார். மெட்ரோ ரயிலில் அவரதுபயணம் 18 நிமிடங்கள் நீடித்தது. 

இதுகுறித்து மெட்ரோ நிலைய அதிகாரிகள் கூறும் போது, “தவுலா குவான் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி மாலை 3.13-க்கு ஏறினார். பின்னர் சரியாக 3.27-க்கு துவாராக ரயில்நிலையத்தில் இறங்கினார். மறுமார்க்கமாக துவாரகாவில் 4.39-க்கு ஏறிய மோடி 4.54-க்கு இறங்கியதாக தெரிவித்தனர்.

மெட்ரோ ரயிலுக்குள் மோடியைக்கண்ட மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். பயணிகள் பலர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். முன்னதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே கடந்த ஜூலையில் இந்தியாவுக்கு வந்த போது இருவரும் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.

 

Leave a Reply