மேகாலயா மாநில புதிய முதல்வராக தேசிய மக்கள் கட்சித்தலைவர் கான்ராட் சங்மா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேகாலயாவில் 60 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 59 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், முதல்வர் முகுல் சங்மா தலைமையிலான ஆளும் காங்கிரஸ் 21 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. முன்னாள் மக்களவை தலைவர் பி.ஏ.சங்மாவின் மகன் கான்ராட் சங்மா தலைமையிலான என்.பி.பி கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதர கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 31 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எனினும் 6 இடங்களில் வென்ற டோங்குபர் ராய் தலைமையிலான யு.டி.பி, மக்கள் ஜனநாயக முன்னணி (4), தலா 2-ல் வென்ற பா.ஜ.க, எச்.எஸ்.பி.டி.பி, 1 சுயேச்சை உறுப்பினர் உட்பட 34 பேர் என்.பி.பி.க்கு ஆதரவளிக்க முன்வந்தனர்.

இதை தொடர்ந்து. கவர்னர் கங்கா பிரசாத்தை சந்தித்து புதிய அரசு அமைக்க கான்ராட் சங்மா உரிமைகோரினார். அதை ஏற்று கவர்னரும் அவருக்கு அழைப்புவிடுத்தார். இந்நிலையில் மேகாலயாவில் புதிய அரசு நேற்று பதவி ஏற்றுக் கொண்டது. முதல்வராக கான்ராட் சங்மா பொறுப் பேற்றுக் கொண்டார். ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் கங்கா பிரசாத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் 11 பேர் அமைச்சர்களாக பொறுப் பேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply