மோடி அரசு "மேக் இன் இந்தியா" திட்டத்தின் படி ராணுவத்தை பல்வேறு வகையில் சுயசார்ப்புடனும், அதி நவீன தொழில்நுட்பத்துடனும் மாற்றி வருகிறது. உலகின் தலைசிறந்த ராணுவ ஆராய்ச்சி மையங்களில் ஒன்றான "டி ஆர் டி ஓ" தற்போது முனைப்புடன் பல துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நம் ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது.
அவற்றுள் சில‌ முக்கிய கண்டுப்பிடிப்புகள் கீழே !!

1) ரேடார்களுக்கு பிடிபடாத ஸ்டீல்த் தொழில்நுட்பத்தை கொண்ட "ஆரோ" (AURO Autonomous unmanned research aricraft) எனும் ஆளில்லா விமானம் கூடிய விரைவில் வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. .

2) எதிரி விமானங்களை அடையாளம் தெரியாமல் அதி நவீன‌ கதிர் வீச்சுகளால் (Relativistic Electron Beams) நொறுக்கக் கூடிய 'காளி' (The KALI – Kilo Ampere Linear Injector) எனும் ஆயுதம். அசுரர்களை அழிக்கக்கூடிய பத்ரகாளியை போல், இது வினாடிகளுக்கு குறைவாக பல ஆயிரம் வாட் மைக்ரோவேவ்களை பாய்ச்சக் கூடியதாம். இதை வானில் பாய்ச்சுவதன் மூலமாக, போர் காலங்களில் அதி வேகமாக ஊடுறுவும் எதிரி விமானங்களை கொத்து கொத்தாக வீழ்த்த இயலும் என்கிறார்கள் நிபுனர்கள்.

3) 50000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டு அனைத்தையும் கண்கானிக்கக் கூடியா ஆளில்லா 'ட்ரோன்' விமானங்கள். மற்ற போர் விமானங்களை ஒப்பிடுகையில் குறைந்த செலவில் தயாரிக்கக் கூடிய இந்த விமானங்கள் மூலமாக தேவைப்பட்டால் ஏவுகனைகளையும், குண்டுகளையும் பொழிய இயலும் என்கிறார்கள்.

பட்டிய‌ல் இப்படி சென்று கொண்டே இருக்கிறது. நல்லவன் நாடாண்டால் எல்லாம் சாத்தியமே !!

Leave a Reply