‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் ரூ.11,929 கோடி மதிப்பில் 56 ராணுவவிமானங்களை உள்நாட்டிலேயே தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கும் புதிய ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத் திட்டுள்ளது.

2011-ல் ராணுவ பயன் பாட்டிற்காக விமானங்கள் வாங்க ஆலோசனை நடத்தப்பட்டது. 2013 மே மாதம் இதற்காக உலகளவில் டெண்டர் வெளியிடப்பட்டது. ராணுவ சரக்குபோக்குவரத்து விமானங்கள் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக திகழும் எம்பரர், லாக்ஹீட் மார்ட்டின், ஏர் பஸ், இல்சின், காசா, சாப் & அலினியா உள்ளிட்ட 8 நிறுவனங்கள் டெண்டருக்காக விண்ணப்பம் செய்தன. அப்போது பொதுத் துறை நிறுவனங்களை ஓரங்கட்ட முயல்வதாக எழுந்த புகாரின் அடிப்படையிலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவந்ததாலும் இத்திட்டம் தடைபட்டது.

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு மத்தியில் அமைந்த பின் இந்த திட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது டாடா ஏர் பஸ் மட்டுமே களத்தில்இருந்தது. இதையடுத்து ஒற்றை டெண்டர் அடிப்படையில் 2015 மேமாதம் புதிய ராணுவ சரக்குவிமானங்கள் தயாரிக்கும் முயற்சியில் டாடா ஏர் பஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. அப்போதைய மத்திய ராணுவ மந்திரி மனோகர்பாரிக்கர் இதற்கான நடவடிக்கையில் இறங்கினார். இதற்காக மத்திய அரசு ரூ.11,929 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து இதற்கான தயாரிப்புபணிகள் தொடங்கும். அதன் அடிப்படையில் முதல் 16 விமானங்கள் வெளிநாட்டில் இருந்து வாங்கப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியநிறுவனமான டாடா ஏர் பஸ்சுடன் இணைந்து அடுத்த 8 ஆண்டுகளில் தயாரிக்கப்படும். 56 விமானங்கள் தயாரித்த பின், இந்திய விமானப் படையில் 1960 முதல் பயன்படுத்தப்பட்டு வரும் ஆவ்ரோ வகையான விமானங்கள் அகற்றப்படும். இதற்கான இறுதி ஒப்பந்த கையெழுத்து விரைவில் நடைபெற உள்ளது என்று மத்திய ராணுவஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின்படி குறைந்தது 6 மிகப் பெரிய திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.3.5 லட்சம் கோடியை பல்வேறு கட்டங்களாக ஒதுக்கியுள்ளது. 56 புதியவிமானம் தயாரிக்க ஒப்பந்தம் செய்ததன் மூலம் 6 ஆண்டுகளாக இழுத்தடித்து வந்தபிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

Leave a Reply