மேற்குவங்கத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும், இதற்கு துணைபோகும் மாநில அரசுக்கு ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகிலபாரத பிரதிநிதிகள் சபைக்குழு பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அகில பாரத தலைவர் மோகன் பகவத், தலைமை வகித்தார். பொதுசெயலர் சுரேஷ்ஜோஷி, கேரள மற்றும் தென்பாரத அமைப்பாளர் வன்னியராஜன், செய்திதொடர்பாளர் மன்மோகன் மைத்ரியா இணைசெயலாளர்கள் சுரேஷ் சோனி, கிருஷ்ணகோபால், பாகையாஜி, மற்றும் உறுப்பினர்கள் பலர்கலந்து கொண்டனர்.

 

3 நாட்கள் நடந்த மாநாட்டின் நிறைவுவிழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இது தொடர்பாக அகில பாரத இணை செயலர் தத்தாத்ரேயா கோச பலே நிருபர்களிடம் கூறியதாவது: நாடுமுழுவதும் ஆர்.எஸ்.எஸ்., நல்லவளர்ச்சி கண்டுள்ளது. குமரி முதல் இமயம்வரை எங்களின் அமைப்பை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். மணிப்பூர் மற்றும் குஜராத்தில் முன்னேற்ற நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு வலுப் பெற்றுள்ளது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாகா அமைப்பில்சேர்ந்துள்ளனர்.

இந்த பொதுக்குழுவில் முக்கியமாக, மேற்கு வங்கம், வங்கதேச எல்லையில் இஸ்லாமிய அமைப்பினர் அத்துமீறி நடந்துவருவது விவாதிக்கப்பட்டது. இது கவலை அளிக்கிறது. இங்கு வாழும் இந்துக்கள் பாதுகாப்பை மாநில, மத்திய அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். இதற்கான ஒரு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம்.

 

மேற்குவங்கத்தில் முஸ்லிம் ஓட்டுவங்கி தொடர்பாக மாநில ஜிகாதி இன வெறி, தேசவிரோத சக்தியை ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால் மாநிலத்தில் இந்துக்கள்வளர்ச்சி குறைந்து வருகிறது. காலியாசக் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் மீது ஜிகாதிதாக்குதல் காரணமாக ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. தேசிய பாதுகாப்பிற்கு சவாலாக உள்ளது. இந்துக்கள் வெளியேறிவருகின்றனர். கள்ளநோட்டுகள் கடத்தல் பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் உள்ளிட்ட வன்செயல்கள் தொடர்கிறது. இங்கு கலவரம் தூண்டப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply