மக்களவை தேர்தலுக்கான 4ஆம் கட்டத் தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளில் இன்று நடைபெறறது.

இதனிடையே, மேற்குவங்க மாநிலத்தில் வாக்குப் பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல்ஏற்பட்டது. இதில் பாஜக வேட்பாளர் கார் உடைக்கப்பட்டது. இதேபோல், மேற்கு வங்கத்தில் ஆசன்சோல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடி எண் 125-ல் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக.,வினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புபடையினர் அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொல்கத்தாவில் பாஜக தேர்தல்பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,

மேற்குவங்கத்தில் மம்தாவை ஆட்சியில் இருந்து தூக்கிஎறிய விரும்புகின்றனர். நாடுமுழுவதும் தேர்தல் முடிவுகளுக்குப்பின்னர் எல்லா பக்கமும் தாமரை மலர்ந்திருக்கும், இங்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் மே 23 தேர்தல்முடிவுகள் வந்தவுடன் பா.ஜ.,வில் இணைய உள்ளனர். மக்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் முதல்வராக நீடிப்பது கடினம்.” இவ்வாறு பேசினார்.

Leave a Reply