மேற்கு வங்கத்தில் பாஜக.,வுக்கு பெரும்வெற்றி கிடைக்கும் என இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளை கைபற்றி பெரும் வெற்றிபெற்றது. எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணி 2 இடங்களில்மட்டுமே வெற்றிபெற்றது. 2009- மக்களவைத் தேர்தலில் அந்த கூட்டணி 13 இடங்களை கைபற்றியது.

2009- மக்களவைத் தேர்தலில் 15 இடங்களி்ல் வெற்றிபெற்ற நிலையில் திரிணாமுல் 34 இடங்களை கைபற்றியது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 39 சதவீத வாக்குகளையும், இடதுசாரி கூட்டணி 30 சதவீத வாக்குகளையும் பெற்றன.

2014-ம் ஆண்டு  தேர்தலில் 17 சதவீத வாக்குகளைபெற்ற பாஜக 2 இடங்களில் வென்றது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மேற்குவங்கத்தில் பாஜக கணிசமான வளர்ச்சிபெற்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலி இடதுசாரிக் கூட்டணியை மூன்றாம் இடத்துக்கு தள்ளி பாஜக 2-ம் இடம்பெற்றது. மக்களவைத் தேர்தல் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதே வேகத்துடன் பாஜக, திரிணாமுல் காங்கிரஸூடன் மோதுகிறது.

தேர்தல் அறிவிப்புவெளியானது முதலே அம்மாநிலத்தில் பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரஸூக்கும் இடையே தொடர்ந்து அடிதடி மோதல்கள் நடந்துவருகின்றன.

 

இடதுசாரிக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள், நிர்வாகிகளை பொறுத்தவரையில் தங்களுக்கு வலிமைஇல்லாத தொகுதிகளில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கோரிவருவதாக கூறப்படுகிறது. இதனை இடதுசாரி கட்சிகளின் மாநில நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளா விட்டாலும், கீழ்மட்ட அளவில் இடதுசாரி கட்சி தொண்டர்கள் மத்தியில் பாஜக ஆதரவுபோக்கு காணப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் வழக்கமாக இடதுசாரி கட்சிகளுக்கு வாக்களிக்கும் நடுத்தரவகுப்பு மக்கள் இந்தமுறை பெருமளவு பாஜக மீது ஈர்ப்புகாட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.  மேற்குவங்க நிலவரம் குறித்து இந்தியாடுடே வெளியிடப்பட்டுள்ள கருத்துகணிப்பு:

மொத்த தொகுதி: 42

பாஜக 19- 22

திரிணாமுல் காங்கிரஸ்: 19 -22

காங்கிரஸ் : 1

இடதுசாரி: 0

Comments are closed.