பாரதப் பிரதமர் மோடியின் அரசில் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு மீனவர்கள் கொல்லப் படுவது தடுக்கப்பட்டுள்ளது என, பாஜக அகிலஇந்திய பொதுச் செயலர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை காந்திபூங்கா அருகில் நடைபெற்ற தேர்தல்பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 10 ஆண்டுகள் நடைபெற்றது. அப்போது நாகை, இராமேசு வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்தனர்.

600-க்கும் அதிகமான மீனவர்கள் இலங்கை கடற்படை யினரால் கொல்லப்பட்டனர். ஆனால், மோடி அரசு பொறுப்பேற்றபிறகு இரு ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் கொல்லப் படுவது தடுக்கப்பட்டுள்ளது என்றார்.

 
 

Leave a Reply